“யுத்தத்திலும் காதலிலும் எல்லாம் சரி என்று அவர்கள் சொன்னார்கள் தானே? நான் இதைக் கேட்டிருக்கிறேன்.”
யார் சொன்னார்கள்?
“தெரியவில்லை. ஆனால் மக்கள்தான்”
“சொல்லி இருப்பார்கள். ஆனால், அது வெற்றிபெற்ற மக்களின் கூற்று. தோல்விடைந்தவர்களுடையது அல்ல; அதிகாரத்தின் கூற்று. அதிகாரமற்ற சாமான்யனின் கூற்று அல்ல. ‘எல்லாம் சரிதான்’ ஆனால், அந்த ‘சரி’யின் நியாயத்தை முடிவு தீர்மானிக்கிறது” என்பதாக ஒரு உரையாடல் ஜான் கொன்னாலி எழுதிய ‘தி இன்ஃபெர்னல்ஸ்” நாவலில் வரும். இது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.
“கொத்து கொத்தான மரணமும், தேர்தலும்”

2006-ம் ஆண்டு ஈழ மக்கள் மீதான தாக்குதல் மீண்டும் துவங்கியது. ஆகஸ்ட் 14, 2006-ம் ஆண்டு முல்லைத்தீவு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகமான செஞ்சோலையில் குண்டுகளை வீசி 61 குழந்தைகளைக் கொன்றது இலங்கை ராணுவம். அந்தப் புள்ளியிலிருந்து தொடங்கிய அழிப்பு நடவடிக்கை 2007 – 2008-ம் ஆண்டுகளில் உச்சம் தொட்டது. தினம் தினம் கொத்துக் கொத்தாகத் தமிழ் மக்கள் செத்துக் கொண்டிருந்தார்கள். இந்த சமயத்தில் தமிழகம் தன்னிச்சையாகக் கிளர்ந்தெழுந்தது. இளைஞர்கள் கரம் கோத்தார்கள். “காங்கிரஸ் தலைமையிலான மத்தியஅரசுதான் இந்த இன அழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. மத்தியஅரசு இலங்கையில் தமிழ் மக்களைக் கொல்ல ஆயுதம் தருவதை உடனே நிறுத்த வேண்டும். தமிழ் மக்களைக் காக்கவேண்டும்” என்றார்கள். மயிலை மாங்கொல்லையில் நடந்த நிகழ்வில் கருணாநிதி, “மத்தியஅரசு தமிழ் மக்களின் குரலுக்குச் செவிமடுக்கத் தவறினால் தமிழகத்திலிருந்து நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்வார்கள்” என்று அறிவித்தார். கரகோஷம் விண்ணைப் பிளந்தது. கருணாநிதி பெரிதாக எதையோ செய்யபோகிறார். நன்மைகள் நடக்கப் போகிறது என்று தமிழர்கள் நம்பினார்கள்.

ஆனால், அந்த அறிவிப்பு காற்றில் கரைந்து போனது. ஆம், அதன்பின் அவர் செய்தது எல்லாம் இங்கு போராடிய தமிழக மக்களை ஒடுக்கியதுதான். ஒடுக்கியது மட்டும்தான். அப்போது, ஜெயலலிதா, “போர் என்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள்” என்று சிதறிக்கிடந்த ஈழமக்களின் பிணங்களைக் கடந்து சென்றார். இத்தகைய சூழலில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் மீண்டும் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியே அமைந்தது. இந்தக் கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க தலைமையில் பா.ம.க, ம.தி.மு.க, சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் கட்சிகளும் அணிதிரண்டன. உக்கிரமாகக் கொத்துக் குண்டுகளை வீசி இலங்கை ராணுவம் தமிழ் மக்களைக் கொன்று கொண்டிருக்க. இங்கே தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி வாக்குக் கேட்டுக் கொண்டிருந்தது. தி.மு.க தமிழர்களை வஞ்சித்து விட்டது என ஒரு கோப அலை அந்தக் கூட்டணிக்கு எதிராக இருந்தது. ஆனால், இது தேர்தலில் எதிரொலிக்கவில்லை. ஆம், தி.மு.க கூட்டணியே அதிக இடங்களில் வெற்றிபெற்றது. 29 இடங்களைக் கைப்பற்றியது. சென்றமுறை போல அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வி இல்லாமல், அ.தி.மு.க கூட்டணி 12 இடங்களைக் கைப்பற்றியது.
மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. அதில் மீண்டும் தி.மு.க அமைச்சர்கள். இந்தமுறை அந்த அமைச்சரவையில் மு.க. அழகிரியும் இடம்பெற்றார். கருணாநிதியின் மொழியில் “கண்கள் பனிக்க… இதயம் இனிக்க” மீண்டும் இணைந்த குடும்பத்திலிருந்து தயாநிதி மாறனும் அமைச்சர் ஆனார். இப்படியான முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ஜெயலலிதா கொஞ்சம் துவண்டுதான் போனார். அ.தி.மு.க-வே வலுவிழந்தது போன்ற ஒரு தோற்றம் வந்தது. பலர் அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு தாவிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் உணராதவராக ஜெயலலிதா கொடநாட்டில் பிடித்தமான ஆங்கிலப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். எளிய எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தங்கள் தலைவர் உருவாக்கிய கட்சி காணாமல் போய்விடுமோ என்று மன அழுத்தத்தில் உழன்றுக் கொண்டிருந்தார்கள்…!
“கட்சியை மீண்டும் உயிர்பித்தல்”
இப்படியான சூழலில் தி.மு.க-வுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு அலை தமிழகத்தில் கடுமையாகவீசியது. அமைச்சர்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். சினிமா தொழில் முழுவதும் கருணாநிதி குடும்பத்தின் கைகளுக்குச் சென்றுவிட்டது. மதுரையில் அழகிரி தலைமையில் தனி ராஜ்ஜியமே நடக்கிறது என்று குரல்கள் கேட்கத் தொடங்கியது. தேர்தலும் நெருங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் ஜெயலலிதா சுறுசுறுப்பானார். தி.மு.க ஆட்சிக்கு எதிராகத் தரவுகளைத் திரட்டத் தொடங்கினார். கோவையில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார். அ.தி.மு.க உறுப்பினர்கள் உற்சாகம் அடைந்தனர். மக்களைத் திரட்டத் தொடங்கினர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா, “விரைவில் எம்.ஜி.ஆர் ஆட்சி வரும். தீய சக்திகள் விரட்டப்படும்” என்று கர்ஜித்தார். அந்த ஆர்ப்பாட்டத்தில், ஏறத்தாழ 8 இலட்சம் பேர் திரண்டதாகப் புள்ளி விபரம் சொல்லியது. தி.மு.க அதிர்ந்து தான் போனது.
இதே உற்சாகத்தில் அடுத்து அழகிரியின் கோட்டையாகக் கருதப்பட்ட மதுரையில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார். அங்கும் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டார்கள். அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா, “ நான் மதுரையில் கால் எடுத்துவைத்தால், என்னைக் கொல்வதாக எனக்குப் பல மிரட்டல்கள் வந்தன. இது அஞ்சாநெஞ்சனின் கோட்டையாம். நான் அத்தகைய மிரட்டல்களுக்கு என்றுமே அஞ்சப்போவதில்லை. நான் அஞ்சாமல் மதுரைக்கு வந்துள்ளேன். ஆனால் என்னைக் கொல்வதாக கூறியவர்கள் எங்கே? யார் உண்மையான அஞ்சாநெஞ்சன்?” என்று திரண்டிருந்த கூட்டத்தின் முன் முழங்கினார். கூட்டம் ஆர்ப்பரித்தது.
கூட்டம் கூடத் தொடங்கிவிட்டது. கட்சிக்காரர்களும் சுறுசுறுப்பாக வேலைப்பார்க்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால், இது மட்டும் போதாது. கூட்டணி வேண்டும். அதுவும் பலமான கூட்டணி. என்ன செய்யலாம் என்று நினைத்தவர் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்கத் தயாரானார்.
ஒரு ஆங்கில நாவலிலிருந்து இந்த அத்தியாயத்தை தொடங்கினேன். இன்னொரு ஆங்கில நாவலிலிருந்து முடிக்கிறேன்…
“எங்கு நாம் நமக்கான கூட்டணியைக் கண்டடைய முடியும்.?” “நிச்சயம் எதிரிகளிடமிருந்துதான்!” என்பதாக ஒரு உரையாடல் ஜோ அபர்க்ரோம்பி எழுதிய ஹாஃப் த வார்ல்ட் (Half the world) நாவலில் வரும். இது எங்கு பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயம் அரசியலுக்கு மிகச்சரியாக பொருந்துகிறது. ஆம் இங்கு கூட்டணி, கொள்கைகள்மீது கட்டமைக்கப்படுவதில்லை. ஒரு தேவையை வென்றடைய எதிரிகள் ஒன்றிணைக்கிறார்கள்.
“வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை வழங்குவேன் என்றுகூறுவதெல்லாம் குடிகாரன் பேச்சைப் போன்றதுதான். நான் யாரைச் சொல்கிறேன் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும்.” என்று விஜயகாந்தை குடிகாரர் என்ற தொணியில் விமர்சித்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டதை விஜயகாந்தும்…“ஊத்திக் கொடுத்தாரா” என்ற தொணியில் விஜயகாந்த் பேசியதை ஜெயலலிதாவும் மறந்து.. இரண்டு எதிரிகளும் கரம் கோத்தார்கள்.
தொடரும்…
நன்றி : ஆனந்த விகடன்
முன்னைய பகுதிகள் :
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-13-02-23-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-14-03-03-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-15-03-18-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-16-04-02-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-17-04-25-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-18-05-28-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-19-07-19-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-20-08-10-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-21-08-17-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-01-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-08-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-23-09-21-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-25-09-30-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-27-10-17-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-28-11-04-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-29-11-14-17/
http://www.vanakkamlondon.com/httpwww-vanakkamlondon-comfrom-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-30-11-29-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-31-12-08-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-32-12-19-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-33-01-04-18/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-34-01-11-18/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-35-01-19-18/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-36-02-15-18/
