பெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் நடிகர் கமலஹாசன் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். ‘மக்கள் நீதி மய்யம்’ என்று தனது கட்சியின் பெயரை அறிவித்து தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கியுள்ளார்.
அங்கு நடந்த பொது கூட்டத்தில் பேசிய போது ” இனி நான் உங்கள் வீட்டு விளக்கு. இந்த விளக்கை பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை. அதனை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கையில் உள்ளது” என கேட்டுக் கொண்டார்.
பலரும் இவருக்கு வாழ்த்துக்களை த் தெரிவித்து வருகின்றனர்.
