‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமாகி 13 வருடங்களாக முன்னணி கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஆர்யாவை திருமணம் செய்ய 7 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்யாவுக்கு 37 வயது ஆகிறது.
தனக்கு பெண் பார்ப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் வீடியோவில் பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 7 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்து உள்ளதாகவும் அதில் 18 பெண்களை முதலில் தெரிவு செய்து பின்னர் அதில் ஒருவரை தெரிவு செய்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.
