செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கமலஹாசன் | மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது

கமலஹாசன் | மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது

1 minutes read

மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது.  அவரை கடைசியாக சந்தித்த நினைவுகள் வந்து செல்கின்றன என கமலஹாசன் தெரிவித்துள்ளார். இதேபோன்று நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.  வருத்தம் தருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி 1976-ம் ஆண்டு பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படம் மூலம் தனது 13வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் நடித்துள்ளார். தொடர்ந்து 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடிகர் கமல்ஹாசனுடனும், பிரியா, ஜானி உள்ளிட்ட படங்களில் நடிகர் ரஜினிகாந்த் உடனும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

இதே போன்று பல நடிகர் நடிகைகள் தொடர்ந்து இரங்கல் செய்திகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். ஸ்ரீதேவியின் மறைவு திரையுலகுக்கு மிகப் பெரும் இழப்பு என பலர் டுவிட்ட்டரில் கருத்து தெரிவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.