செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் | வடகொரியா

சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் | வடகொரியா

1 minutes read

அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்து உள்ளது.

அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தினார்.

தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா கரம் நீட்டியதும் அதனை மிரட்டும் வகையில் அணுகுண்டு சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன சோதனைகளை வடகொரியா நடத்தியது. இதனால்  அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல் களை அனுப்பி அப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக போர் பதற்றம் நீடித்து வருகிறது.

சமீபகாலமாக கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் நட்புறவு மேற்கொள்ள விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐ.நா. விதித்த பல்வேறு பொருளாதார தடைகள் காரணமாக வடகொரியா இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கருதப்படுகிறது. அமெரிக்கா-வடகொரியா இடையே கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர் பதற்றம் விரைவில் தணியும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.