அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சிரியாவில் சண்டை நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர் அதிபர் ஆட்சிக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது.
கடந்த 12 நாட்களில் மட்டும் அங்கு நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக சுமார் 1000 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். ஐ.நா. சபையில் 30 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய சிரியா அரசு ஒப்புதல் அளித்தது.
பல்வேறு கோரிக்கைகளுக்கு பின்பு இருதரப்பும் தினமும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டு இருக்கிறது. அதேபோல் வான்வெளி தாக்குதல் நடத்தப்படமாட்டாது என ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் தொடர்ந்து தரைவழி தாக்குதல் நடைபெற்று வருகிறது.
