இரு நாட்களாக கண்டியில் ஏற்பட்டுள்ள இனமோதல்கள் சிறிலங்காவின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக் கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் சில நாட்களுக்கு முன்னதாக நடத்தப்பட்டு பள்ளிவாசல் ஒன்றும் வாணிப நிலையங்களும் சேதப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டியில் புதிய வன்முறைகள் வெடித்துள்ளன. தற்போது இத் தாக்குதல் தீவிரமடைந்து வருகின்றது.
இதையடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, நேற்று மாலை காவல்துறை ஊரடங்குச் சட்டம் கண்டி மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மோதல்களைத் தூண்டும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிகிறது.
