பல படங்களில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அதேபோல் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் பணியாற்றிய கலை இயக்குநர் முத்துராஜ் இந்த படத்திற்கும் கலை பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஞ்ஞானி தொடர்பான இக் கதையை ரவிக்குமார் இயக்க இருக்கிறார். வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானி கதை. எனவே, இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் விஞ்ஞானி ‘கெட்-அப்’-க்கு மாறுகிறார்.
