பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பயங்கரவாதம் குறித்து பயிற்சி அளித்த 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
கொலை செய்வது, மனித குண்டாக மாறுவது, கத்தியால் குத்துவது, பொது இடங்களில் பெரிய குண்டு வெடிப்பை நிகழ்த்துவது குறித்து இவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.
பயங்கரவாதிகளின் செயல்பாடு குறித்து வீடியோ மூலம் விளக்கி லண்டனில் நடந்த துப்பாக்கி சூடு, அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், மும்பை தாக்குதல் வீடியோக்களை ஒளிபரப்பி உள்ளனர். புதிய பயங்கரவாத இயக்கம் இக்குழந்தைகளை வைத்து தொடங்க திட்டமிட்டு இருந்தனர். இவர்களிடம் படித்த குழந்தைகளில் பெரும் பாலானவர்கள் 15 வயதிற்கும் குறைவானவர்கள்.
பயங்கரவாதத்தை கற்றுக் கொடுத்த 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
