கண்டி மாவட்டத்தில் நேற்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும் முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது நள்ளிரவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சில வாணிப நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் பிரதேசத்தில் நேற்றிரவு தாக்குதல் நடத்த முயன்ற நூற்றுக்கணக்கானோரைக் கொண்ட குழுவின் மீது சிறிலங்கா காவல்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்துள்ளனர்.
அதே வேளை சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக, இன்று அதிகாலை 1 மணியளவில் அங்கு சென்றிருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
