செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆத்திரத்தில் தங்கையை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்

ஆத்திரத்தில் தங்கையை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்

1 minutes read

அமெரிக்காவில் வசிக்கும் அலிசா எட்வர்ட்ஸ் (27) என்ற பெண்ணுக்கு  8 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் அலிசா எட்வர்ட் வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர்.

அந்த நேரம் அண்ணன் தங்கைக்குள் சண்டை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் வீட்டில் குண்டு நிரப்பி வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்து கண்டபடி சுட்டுத் தள்ளினான். அதில் அவனது 4 வயது தங்கை உடலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவள் ரத்த வெள்ளத்தில் படுக்கையில் மயங்கி விழுந்தாள். இதுகுறித்து அவன் தனது தாயார் அலிசாவுக்கு தகவல் தெரிவித்தான்.

அந்த பெண் வேலையிடத்தில் இருந்து வந்து குண்டு காயம் அடைந்த தனது மகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். ஆனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதன்படி தாயும் மகனும் கைது செய்யப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.