2
துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஸ்ரீதேவி, குளியல் தொட்டியில் மூழ்கி கடந்த 24-ம் தேதி உயிரிழந்தார் என்பது எல்லோரும் அறிந்ததே. ஸ்ரீதேவியின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தனது 21 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடி இருக்கிறார்.
ஒவ்வொரு பிறந்த நாளையும் ஸ்ரீதேவியுடன் கொண்டாடிய ஜான்வி இந்த வருடம் தனது 21 வது பிறந்த நாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடினார்.
முதியோர்கள் அனைவரும் ஜான்வி கபூரை வாழ்த்தி பாட்டுப்பாடி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றனர்.
நிறைய பேர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
