தயாரிப்பாளர் சங்கம் கடந்த 1-ந் தேதி முதல் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி வைத்துள்ளனர்.
வருகிற 16-ந் தேதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுகின்றன. சினிமா தியேட்டர் உரிமையாளர்களும் சில கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்து விட்டன.
எனவே ரஜினி, கமல் ஆகியோர் திரையுலக பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதுபோல் திரைத் துறையின் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து உள்ளனர். ரஜினி, கமல் தவிர மற்ற பிரபல நடிகர்களும் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். நடிகர்கள், இயக்குனர்கள் சம்பளத்தை முறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
