செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அவசர காலச் சட்டம் பற்றிய இறுதித் தீர்மானம் | இலங்கை

அவசர காலச் சட்டம் பற்றிய இறுதித் தீர்மானம் | இலங்கை

1 minutes read

அவசரகாலச் சட்டத்தை நீக்குவதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் ஜனாதிபதி நாடு திரும்பியதும் எடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய ஜனாதிபதி நாடு திரும்பியதும் பிரதமருக்கும்இ ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம் பெற இருப்பதாக அரச உயர் மட்ட தகவல்கள் கூறுகின்றன.

இந்தக் கலந்துரையாடலில்இ அவசரகாலச் சட்டம் தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்பதோடு நடப்பு அரசியல் விவகாரம் பற்றியும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை அமுலில் உள்ள அவசர காலச் சட்டத்தை தற்போதைக்கு நீக்கவேண்டாம் என்று பாதுகாப்புப் பிரிவுஇ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு சபையின் பிரதானிகளின் பங்கெடுப்புடன் வாராந்தம் இடம்பெறும் பாதுகாப்பு மீளாய்வுக் கூட்டத்தில் வைத்து இந்த வேண்டுகோளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பாதுகாப்புப் பிரிவு விடுத்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை தொடர்பான விசாரணைகள் 70 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும்இ எஞ்சியுள்ள விசாரணைகளையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமரிடம் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.