செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜகத் ஜயசூரியவிற்கு போர்க் குற்ற அறிக்கை | ஜெனீவா

ஜகத் ஜயசூரியவிற்கு போர்க் குற்ற அறிக்கை | ஜெனீவா

2 minutes read

ஜெனீவாவில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக வெளிநாடுகளில் தொடரப்பட்ட யுத்தக் குற்ற வழக்குகளும் முன்னுதாரணமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு யுத்தக் குற்றவாளிகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஜெனீவாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் டிரயல் சர்வதேசம் என்ற அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டது.

ஜெனீவாவில் வைத்து நேற்றைய தினம் வெளியிடப்பட்ட  இந்த அறிக்கையில் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக இலத்தின் அமெரிக்க நாடுகளில் தொடரப்பட்ட யுத்தக் குற்ற வழக்குகள் தொடர்பான விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரை முன்னிட்டே தண்டனை முக்திக்கு எதிராகவும் சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறிய யுத்தக் குற்றங்கள் உட்பட பாரதூரமான குற்றங்களுக்கு எதிராகவும் போராடிவரும் டிரயல் சர்வதேச அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உலக முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தொடரப்பட்ட 58 வழக்குகள் தொடர்பான விபரங்களை உள்ளக்கிய இந்த அறிக்கை நீதிக்கு இடமளியுங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

126 குற்றவாளிகளுக்கு எதிராக ஐரோப்பா ஆபிரிக்கா மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகள் உட்பட 14 நாடுகளில் தொடரப்பட்ட 58 வழக்குகள் தொடர்பான விபரங்களை அடக்கி பிலீப் கிஹான்ட் மற்றம் வெலரி போலே ஆகியோரால் தயாரிக்கப்பட்ட 107 பக்கங்களைக் கொண்டதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.

இவர்களில் 91 பேருக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. அதேவேளை 55 குற்றச்சாட்டுக்கள் சித்திரவதைகள் தொடர்பானவை.

யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு இலங்கை அரசு கடந்த ஒன்பது மாதங்களில் எதனையும் செய்யாது இருப்பது தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் அதிருப்தியை வெளியிட்டிருந்ததுடன் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக வேறு வழிகளை நாடுமாறும் வலியுறுத்தியிருந்தார்.

யஸ்மின் சூகா தலைமையிலான இலங்கையின் உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பின் தலைமையில் லத்தின் அமெரிக்க நாடுகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவின் பிறேசிலுக்கான தூதுவராக கடமையாற்றிய ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் டயசுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி பிறேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் தொடரப்பட்ட இந்த யுத்தக் குற்ற வழக்குகளை அடுத்து இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் டயஸ் அவசரமாக நாடு திரும்பியிருந்தார்.

ஜகத் டயசுக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கையும் கோடிட்டுக் காட்டியிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அதனை முன்னுதாரணமாகக் கொண்டு வெளிநாடுகளில் யுத்தக் குற்றங்கள் உட்பட சர்வதேச சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு ஆலோசணையும் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும் ஜகத் ஜயசூரிய உட்பட ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக உலகில் எந்தவொரு இடத்திலும் தண்டிக்க இடமளிக்கப் போவதில்லை என இலங்கையின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சூளுரைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.