செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் எதிர்க்கட்சித் தலைவர் சுமந்திரனா? – மஹிந்த அணி கேள்வி!

எதிர்க்கட்சித் தலைவர் சுமந்திரனா? – மஹிந்த அணி கேள்வி!

1 minutes read

சுமந்திரன்க்கான பட முடிவுகள்"

இன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இடையில் எதிர்க்கட்சி தலைவர் மோதல் வந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘எதிர்க்கட்சித் தலைவரின் கன்னியுரை சபையில் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவா என்ற கேள்வி எழுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவர் உள்ளனர். முதலில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தீர்மானித்து அதன் பின்னர் உரையாட வர வேண்டும்.

சஜித் பிரேமதாசவின் அதிகலவினால பேச்சே அவர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. எனவே இன்னும் அதிகமாக நீங்கள் பேசுங்கள், அப்போது தான் எமக்கு வாக்கு அதிகரிக்கும். அதேபோல் இன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இடையில் எதிர்க்கட்சி தலைவர் மோதல் வந்துள்ளது.

சுமந்திரன் எதிர்க்கட்சித் தலைவரா? அனுரகுமார எதிர்க்கட்சித் தலைவரா? ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவரா என்பது குறித்து முதலில் உங்களிடம் ஒரு கலந்துரையாடலை நடத்தி ஒருவரை நியமியுங்கள்.

இன்று எம்.சி.சி குறித்து, சிங்கபூர் உடன்படிக்கை குறித்து, விலை உயர்வு குறித்து எல்லாம் பேசும் எதிர்க்கட்சி தலைவர் அன்று ஆட்சியில் இருக்கும் போது ஏன் வாய் திறக்கவில்லை.

சிங்கப்பூர் உடன்படிக்கை, எம்.சி.சி உடன்படிக்கை அமைச்சரவைக்கு கொண்டுவந்த நேரம் நீங்கள் அமைச்சரவையில் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என அப்போதைய ஜனாதிபதி கூறினார்.

இராணுவ தண்டிப்பு குறித்து நடவடிக்கை எடுத்தபோது ஏன் வாய் திறக்கவில்லை. அப்போதெல்லாம் வாய் திறக்காது இன்று நீங்கள் நியாயம் பேச வந்துள்ளீர்கள். உங்களின் ஆட்சிக் காலத்தில் செய்த எதனையும் நாம் செய்ய மாட்டோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.