கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுப் போட்டிகளில், நடால், தியேம் மற்றும் கிகி பெர்டன்ஸ் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில் ஒஸ்திரியாவின் டோமினிக் தியேம், பிரான்ஸின் ஹ்யூகோ காஸ்டனை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டோமினிக் தியேம், 6-4, 6-4, 5-7, 3-6, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் ரபேல் நடால், செபஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரபேல் நடால், 6-1, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், ஜேர்மனியில் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், இத்தாலியின் ஜென்னிக் சின்னருடன் விளையாடினார்.
இப்போட்டியில் 6-3, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்குகளில் ஜென்னிக் சின்னர் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், உக்ரேனின் எலினா ஸ்விடோலினா, பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், எலினா ஸ்விடோலினா, 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.
மற்றொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ், இத்தாலியின் மார்டினா ட்ரெவிசனை எதிர்த்து விளையாடினார்.
இப்போட்டியில் 4-6, 4-6 என்ற செட் கணக்குகளில் கிகி பெர்டன்ஸ், அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
அதேபோல இன்னொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், போலந்தின் இகாவுடன் மோதினார்.
இப்போட்டியில் 1-6, 2-6 என்ற செட் கணக்குகளில் சிமோனா ஹெலப், படுதோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.