கிரிக்கெட்டில் விளையாடப்படும் ஸ்விட்ச் ஹிட் முறையிலான துடுப்பாட்ட விதிகளுக்கு உட்பட்டது என்று அவுஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் கூறினார்.
ஸ்விட்ச் ஹிட் முறையானது பந்து வீச்சாளர்கள் எதிரானது என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் இயான் சேப்பல் கூறியிருந்த நிலையில், மேக்ஸ்வெல் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2 ஆவது ஒருநாள் ஆட்டத்தில் மேக்ஸ்வெல், ஸ்மித் உள்ளிட்டோர் அவ்வாறு விளையாடியதை குறிப்பிட்ட சேப்பல், அது அருமையான ஷாட் என்றாலும், நியாயமானதல்ல என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறியதாவது: ஸ்விட்ச் ஹிட் முறையானது விளையாட்டின் விதிகளுக்கு உட்பட்டதே ஆகும். கடந்த பல ஆண்டுகளில் துடுப்பாட்ட முறை அவ்வாறு மேம்பட்டு வந்துள்ளது. அதனால் தான் தற்போது ஸ்கோர்களும் அதிகமாக அடிக்கப்படுவதுடன், அவை சேஸ் செய்யப்படுகின்றன. மீண்டும் ஸ்கோர் அதைவிட அதிகமாக அடிக்கப்படுகிறது. ஸ்விட்ச் ஹிட் முறையை முறியடிக்கும் வகையில் பெலர்கள் தான் மாற்று வியூகத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். பேட்ஸ்மேன்கள் எவ்வாறு புதிய துடுப்பாட்ட முறைகளை கண்டறிகிறார்களோ, பெலர்களும் அவ்வாறு தங்களை மேம்படுத்திக் கொண்டு புதிய உத்திகளை கடைப்பிடிக்கலாம் என்று மேக்ஸ்வெல் கூறினார்.
துடுப்பாட்டத்தின் போது ஒரு வலது கை அல்லது இடது கை பேட்ஸ்மேன், பெலர் பந்துவீசும் கடைசி நேரத்தில் தனது நிலையை அப்படியே எதிராக மாற்றிக் கொண்டு முறையே இடப்புறமாகவோ, வலப்புறமாக ஷாட் அடிப்பது ஸ்விட்ச் ஹிட் அல்லது ரிவர்ஸ் ஹிட் எனப்படுகிறது.