செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தொலைத்து விட்ட பாரம்பரியங்கள் | ஜெனனி மோகனதாஷ்

தொலைத்து விட்ட பாரம்பரியங்கள் | ஜெனனி மோகனதாஷ்

1 minutes read
பொங்கல் 2020: பலருக்கு தெரியாத பொங்கல் பற்றிய புராணக் கதைகள்!!! | Legends  Of Pongal - Tamil BoldSky

அந்நிய மோகத்தால் பண்டைத் தமிழர்கள்
அன்று பேணிய தமிழர் பண்பாடு
அழிந்தே போனாலும் நினைவுகள் பசுமையானது

ஆடிப்பாடி தெருவினிலே சின்னஞ்சிறுவர்கள் விளையாட
ஆலமர நிழலில் பெரியவர்கள் உரையாட
ஆசானை மதித்தே சாற்றினோம் பண்பாட்டை

இனிய தமிழினை கலப்பின்றி பேசி
இரவுப் பொழுதினிலே நிலவினிலே சோறுண்டு
இயற்கையை இனிதாக இரசித்தே வாழந்தோம்

ஈதலும் அறமாம் ஒளவை சொன்னாளே
ஈரநெஞ்சுடன் அதனை செய்து காட்டினோம்
ஈன்றவரை மதித்து ஆசியும் பெற்றோம்

உற்சாகத்துடன் திருவிழா நிகழ்வுகளில் கலந்து
உணவுகளை பகிர்ந்து உண்ட நாட்களும்
உன்னதமான அன்றைய கால நினைவுகள்

ஊரில் சேலையும் வேட்டியும் கட்டி
ஊணினை அன்போடு வந்தவர்க்கு உபசரித்து
ஊரார் அனைவரையும் உற்றவராக எண்ணினோம்

எங்கள் பாட்டியிடம் கதைகள் கேட்டு
எட்டு புள்ளி கோலம் போட்டு
எளிமையாக குடிசை வீட்டில் வாழ்ந்தோம்

ஏர் எடுத்து உழவு செய்து
ஏழ்மையின்றி வாழ விவசாயம் செய்தோம்
ஏற்றிய குப்பி விளக்கில் படித்தோம்

ஐக்கியமாய் பழகும் உறவுகளாய் இருந்து
ஒவ்வொரு நாளும் ஒழுக்கமுடன் வாழ்ந்து
ஒன்றுபட்டோம் களிப்படைந்தோம்!

ஓய்வ நேரத்தில் பத்திரிகை வாசித்து
ஓடியற்கூழும் இடித்த அரிசிமா பிட்டும்
ஓளதசியமும் பருகி பழங்களை சுவைத்திட்டோம

நவீன உலகில் இன்று நாமோ
நவநாகரிக மோகத்தால் பேணிய பாரம்பரியங்களை
தொலைத்துவிட்டு மண்ணுக்குள் அகழ்விலே தேடுகிறோம்.

ஜெனனி மோகனதாஷ்
உருத்திரபுரம்
கிளிநொச்சி


அரும்பதம் ஔதசியம் – பால்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More