செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஐ.தே.கவுக்கு புதிய இரத்தம் பாய்ச்சுவதற்குத் திட்டம்!

ஐ.தே.கவுக்கு புதிய இரத்தம் பாய்ச்சுவதற்குத் திட்டம்!

3 minutes read

கட்சியின் அடிமட்ட அமைப்புகளை மீண்டும் செயற்படுத்தும் நோக்கத்துடன் நான் கடந்த சில நாட்களாக நாட்டின் பல மாவட்டங்களுக்கும் சென்று வருகிறேன். நாம் அந்த இடங்களுக்கு செல்லும்போது அரசியலில் நுழையும் ஆர்வத்துடன் உள்ள பலரைக் காண்கிறோம். இதனால் அடுத்த சில மாதங்களில் நேர்மையாக முறையாக செயற்படக் கூடிய சிலரை கட்சிக்குள் கொண்டு வர முடியுமென நான் நினைக்கிறேன். அவ்வாறான ஒரு இடத்திலிருந்து நாம் ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.

கேள்வி: இதில் நீங்கள் என்ன பங்கு வகிக்கிறீர்கள்?

பதில்: -கட்சியை மறுசீரமைக்கும் வகையில் எனக்கு பிரதித் தலைவருக்கான பணிகள் தரப்பட்டுள்ளன. மாவட்ட ரீதியில் கட்சி ஏற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துதல், அவர்களின் யோசனைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளுதல், அதன்படி கட்சியின் தேசிய திட்டத்தை வகுத்தல், அதன் மூலம் கட்சியின் முன்னேற்றப் பாதையை திட்டமிடுவதுடன் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுத்தல் போன்ற விடயங்கள் எனது பங்களிப்பில் இடம்பெறவுள்ளன.

கேள்வி: கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: -நான் காட்டும் பெறுபேறுகளைப் பொறுத்தே அது அமையும் என்று நினைக்கிறேன். நான் சிறந்த முறையில் செயற்பட்டுள்ளதாக எனது கட்சியில் உள்ள பெரும்பாலானோர் கருதி என் மீது நம்பிக்கை வைப்பார்களேயானால், அவ்வாறான ஒரு மாற்றம் வரும் போது அதனை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்கப்பட்டால் நான் அதனை ஏற்றுக் கொள்வேன்.

கேள்வி: 2021 ஜனவரியில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக ரணில் விக்ரமசிங்க கூறியிருக்கிறார். தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு அவரது பங்களிப்பு எவ்வாறு அமையும்?

பதில்: -அவரிடம் இருந்து நிறைய விடயங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். நாட்டின் பொருளாதாரம் மற்றும் பல்வேறு ஏனைய விடயங்கள் தொடர்பாக அவருக்கு உள்ள அறிவு எத்தகையது என்பதை இந்த நாட்டில் உள்ள பலருக்கு இன்னும் தெரியாதுள்ளது. அவர் ஆலோசகர் என்ற ரீதியிலாவது எம்மிடையே இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதன் மூலம் நாடு மிகுந்த பயனைப் பெறும். அடுத்த விடயம் நாட்டின் பொருளாதார விடயங்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பதாகும். இந்த நாட்டின் பொருளாதாரம் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பது பெருமளவு அரசியல்வாதிகளுக்கு தெரியாது. ஆனால் அந்த அறிவு ரணில் விக்கிரமசிங்கவிடம் உள்ளது.கொவிட்19 காரணமாக முழு உலகமும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஒவ்வொரு நாடும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளன. பொருளாதார ரீதியில் இலங்கை போன்ற ஒரு நாட்டை இன்னொரு நாடு மீட்டெடுக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஒரு சில மேற்கு நாடுகளை மட்டுமே நாம் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

கேள்வி: 2021ஆம் வருடத்துக்கான உங்கள் திட்டம் என்ன?

பதில்: – பொருளாதாரம்தான் சிக்கலான விடயமாக இருக்கப் போகிறது. நாடு பணம் இல்லாத நிலையில் உள்ளது. இந்த அரசாங்கத்துக்கு இந்த வருட ஆரம்பத்தில் இருந்த செல்வாக்கு இப்போது இல்லை. 2021 இல் ஐக்கிய தேசியக் கட்சி மீளமைக்கப்படவுள்ளது. அதன் மூலம் தன்னை வலுப்படுத்திக் கொண்டு பலம் மிகுந்த ஒரு எதிர்க்கட்சியாக நாம் மாறப் போகிறோம்.

கேள்வி: அப்படியானால் 2021 இல் நீங்கள் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்: -ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பலர் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் எம்முடன் இணைந்து செயற்பட்டவர்கள்தான். எமக்கு இப்போது ஒரு ஜனாதிபதி இருக்கிறார். 20 இன் மூலம் அவரது கையில் நிறைய அதிகாரங்கள் உள்ளன. அதேநேரம் இந்த அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உள்ளது. இந்த நிலையில் அதனை எதிர்ப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி மட்டுமல்ல, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட மற்றைய எதிர்க் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும். இது பற்றி நாம் இப்போது கலந்துரையாடி வருகிறோம். எந்தவொரு கட்சியினாலும் அதனை தனியாக செய்ய முடியாது. பரந்துபட்ட அரசியல் கூட்டணியால்தான் அது முடியும். அவ்வாறான ஒரு பரந்துபட்ட கூட்டணியாக தேர்தலுக்குச் செல்வதுதான் நல்லது. ஆனால் அவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தாலும் பிரச்சினைகளும் வரத்தான் செய்யும். கூட்டணியில் உள்ள வெவ்வேறு கட்சிகளுக்கும் வெவ்வேறு கொள்கைகள் அபிப்பிராயங்கள் இருக்கும். இதனால் மீண்டும் குழப்ப நிலை ஏற்படும். எனவே முறையான தேசிய திட்டம் பற்றி உட்கார்ந்து பேசினால்தான் நல்ல முடிவை எட்டலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More