Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் ராம்சரண் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

ராம்சரண் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

1 minutes read

விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவார் என சொல்லப்பட்ட நிலையில் அந்த திட்டம் கைவிடப்பட்டு, அதன்பிறகுதான் தற்போது கமல் படத்தை இயக்கி வருகிறார்.

இந்தநிலையில் தெலுங்கில் லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் நடிக்க விரும்பியுள்ளார் இளம் முன்னணி நடிகர் ராம்சரண். இதனை தொடர்ந்து ஆந்திரா சென்று ராம்சரணிடம் கதை சொல்லிவிட்டு வந்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.

அவர் சொன்ன ஒன்லைன் ராம்சரணுக்கு பிடித்துப்போனதாகவும் தகவல். இன்னும் ஒப்பந்தம் உறுதியாகவில்லை என்றாலும், ராஜமௌலி டைரக்சனில் ராம்சரண் நடித்து வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படம் முடிந்ததுமே லோகேஷ் கனகராஜ் படத்தில் தான், ராம்சரண் நடிக்கவுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More