Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 135 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை

135 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை

1 minutes read
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு! -  Vanakkam London

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி  காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.

அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் அதிபட்ச ஓட்டமாக அணித் தலைவர் தினேஸ் சந்திமல் 28 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்தியூஸ் 27 ஓட்டங்களையும் தசுன் சாணக்க 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்ப்பில் டெம் பெஸ் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில், தனது முதல் இன்னிங்ஸிற்காக விளையாடும் இங்கிலாந்து அணி ஒரு விகெட்டை இழந்து 10 ஓட்டங்களை பெற்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More