மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படம் வேறு மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது. ஏற்கனவே தெலுங்கில் வெங்கடேஷ், மீனா ஜோடியாக நடிக்க இப்படம் ரீமேக் செய்யப்பட்டு ஆந்திராவிலும் வசூல் குவிக்கிறது. இதனை நடிகை ஸ்ரீப்ரியா இயக்கி இருந்தார்.
தற்போது தமிழிலும் கமலஹாசன், கவுதமி ஜோடியாக நடிக்க ரீமேக் ஆகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இதையடுத்து இந்தியிலும், ‘திரிஷ்யம்’ படம் ரீமேக் ஆகிறது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில் இந்தியில் அஐய் தேவ்கான் நடிக்கிறார். மீனா வேடத்தில் ஸ்ரேயா நடிக்கிறார்.
இரு குழந்தைகளின் தாயாக ஸ்ரேயா வருகிறார். போலீஸ் அதிகாரி வேடத்தில் தபு நடிக்கிறார். மலையாளத்தில் இந்த கேரக்டரில் ஆஷா சரத் நடித்து இருந்தார். கோவா மற்றும் ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.