செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் ஆதி சாய்குமார் நடிக்கும் ‘ஆதி ருத்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்

நடிகர் ஆதி சாய்குமார் நடிக்கும் ‘ஆதி ருத்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்

1 minutes read

தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற இளம் நட்சத்திர நடிகரான ஆதி சாய்குமார் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஆதி ருத்ரா’ திரைப்படம் – பான் இந்திய அளவில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகிறது என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்றும் படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் நவரசன் இயக்கத்தில் உருவாகும் ‘ஆதி ருத்ரா’ திரைப்படத்தில் ஆதி சாய் குமார் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். ஏ. ஜே. ஷெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். மித்தலாஜிக்கல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை திரிசூல் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” 1960 முதல் 90 வரையிலான காலகட்டத்தின் பின்னணியில் தெய்வீகம் -ஆன்மீகம்- மர்மம் – ஆகிய நம்பிக்கை சார்ந்த அம்சங்களை பின்னணியாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமான தருணங்களையும்… கலவையான உணர்வுகளை வித்தியாசமான படமாளிகை அனுபவங்களாக வழங்கும் வகையில் இந்த படைப்பு தயாராகி வருகிறது” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.