ஆர்.டி.ராஜா அடுத்து பிரமாண்டமான முறையில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படம் தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ,’ ‘வேலைக்காரன்,’ ‘சீமராஜா’ ஆகிய படங்களை ஆர்.டி.ராஜா தாயாரித்திருந்தமை தெரிந்ததே.
இந்த படத்தில், அர்ஜுன் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பலம் பொருந்திய ஒரு வில்லனும் பங்கேற்கிறார். படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.
ரவிகுமார் டைரக்ஷனில் உருவாகி வரும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இப்போது நடித்து வருகிறார். அடுத்தடுத்தாக வரும் பட வாய்ப்புக்களால் மிகவும் பிஸியாக சிவகார்த்திகேயன் இருக்கின்றார்.
