காலம் சென்ற என்.டி.ராமராவ் படங்களில் நடித்தபோது அவருடன் பல நடிகைகள் ஜோடியாக நடித்தனர். அந்த காட்சிகள் இப்படத்துக்காக மீண்டும் படமாக்கப்படுகிறது.
இதையடுத்து அந்தந்த நடிகைகள் வேடத்தில் நடிப்பதற்காக பிரபலமான 9 ஹீரோயின்கள் சேர்த்துக் கொள்ள உள்ளனர்.
சரோஜா தேவி கதாபாத்திரத்தில் அனுஷ்கா, சவுகார் ஜானகி வேடத்தில் ஷாலினி பாண்டே, ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத், ஜெயப்ரதா கதாபாத்திரத்தில் ஹன்சிகா, நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாவித்ரி கதாபாத்திரத்தில் நித்யா மேனன், கிருஷ்ணகுமாரி வேடத்தில் மாளவிகா நாயர் நடிக்கின்றனர். மேலும் சந்திரபாபுநாயுடு கதாபாத்திரத்தில் ராணா நடிக்கிறார்.அவரது மனைவியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் ஆக வித்யாபாலன் நடிக்கிறார்.
