செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில் Halloween களியாட்ட விருந்தில் கத்திக்குத்து: 16, 17 வயது சிறுவர்கள் ஐவர் படுகாயம்!

இங்கிலாந்தில் Halloween களியாட்ட விருந்தில் கத்திக்குத்து: 16, 17 வயது சிறுவர்கள் ஐவர் படுகாயம்!

1 minutes read

இங்கிலாந்தின் சான்ட்லர்ஸ் போர்ட் (Chandler’s Ford) பகுதியில் இடம்பெற்ற ஹலோவீன் (Halloween) களியாட்ட விருந்தொன்றில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 16, 17 வயது சிறுவர்கள் ஐவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம், ஈஸ்ட்லீக்கு அருகிலுள்ள பார்க் வீதியில் சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், தகவலறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த 16 வயதுடைய மூன்று சிறுவர்களும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் தீவிர சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டின் விருந்து நிகழ்வுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத குழுவொன்றே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஹாம்ப்ஷயர் (Hampshire) பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியொருவர் கருத்துத் தெரிவிக்கையில், காயமடைந்த ஒருவர் குத்தப்பட்ட நிலையில் கூச்சலிட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்ததாகவும், அவரை இருவர் துரத்திச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல அம்புலன்ஸ்களும், மருத்துவ ஹெலிகொப்டர் சேவையும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக மற்றொரு சாட்சி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதி ஞாயிற்றுக்கிழமை முதல் பொலிஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் மக்கள் காட்டிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள சிரேஷ்ட விசாரணை அதிகாரி டிடெக்டிவ் தலைமை ஆய்வாளர் எலிசபெத் பைரி, இச்சம்பவம் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் உடனடியாக முன்வந்து பொலிஸாருக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.