Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு

ரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு

1 minutes read

ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

ரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு

ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ்விஜய்யை வைத்து, ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளா இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இதற்கு முன்பு ‘மாநகரம்’, கைதி’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இரண்டுமே வெற்றி படங்கள். அந்த படங்களின் வெற்றிதான் அவருக்கு ‘மாஸ்டர்’ படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக இருந்தார்.

லோகேஷ் கனகராஜ்

ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருந்த ‘அண்ணாத்த’ படம், இன்னும் முடிவடையவில்லை.

அந்த படம் முடிவதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்பதால், இரண்டு மாதங்களில் குறைந்த பட்ஜெட்டில் ஒரு தெலுங்கு படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்து இருக்கிறார்.

தெலுங்கு படத்தை முடித்துக் கொடுத்து விட்டு, அவர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று பேசப்படுகிறது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More