நடிகர் சஞ்சய் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்!

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சஞ்சய் தத் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்


பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்-க்கு கடந்த 8 ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள பிரபல லிலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத்திணறல் தொடர்பாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், நடிகர் சஞ்சயைக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவில் அவருக்கு நெகட்டிவ் என வந்தது. ஆனாலும், தொடர்ந்து 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சஞ்சய் தத்தின் உடல்நிலை தற்போது சீரடைந்ததையடுத்து அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஆசிரியர்