சவால் விட்ட மகேஷ் பாபு | செய்து காட்டிய விஜய்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு விடுத்த சவாலை நடிகர் விஜய் ஏற்று இருக்கிறார்.

மகேஷ் பாபு – விஜய்சமூக வலைதளங்களின் வாயிலாக புதிய புதிய சேலஞ்ச்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர். தெலுங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தன்று மரம் நடும் ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்ற ஒன்றை தொடங்கி வைத்தார்.

இந்த சேலஞ்சை பிரபாஸ், நாகர்ஜுனா, சமந்தா, ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா உள்ளிட்ட தெலுங்கு திரையுலக பிரபலங்கள் செய்தனர். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபுவும் இந்த சேலஞ்சை செய்தார்.

மேலும் இந்த சவாலை செய்யுமாறு நடிகர் விஜய், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், நடிகை சுருதிஹாசன் ஆகியோரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மகேஷ் பாபுவின் சவாலை விஜய் ஏற்பாரா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.

சவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்

விஜய்

இந்நிலையில் நடிகர் விஜய், மகேஷ்பாபுவின் சவாலை ஏற்று மரம் நட்டிருக்கிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் மகேஷ்பாபு இது உங்களுக்காக என்று பதிவு செய்திருக்கிறார்.

ஆசிரியர்