ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? | செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன் கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? - செல்வராகவன்

செல்வராகவன்காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன்.

இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

பொதுவாக அதிகம் சமூகவலைதளங்கள் பக்கம் தலைகாட்டாத செல்வராகவன் இந்த லாக்டவுன் காலகட்டத்தில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

தற்போது கேள்வி – பதில் வடிவில் தற்போது ட்வீட் செய்திருக்கிறார் செல்வராகவன். அந்த பதிவில், “கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?

செல்வராகவன் பதிவு

நான், நண்பர்களுடன் மாலை முழுதும் அரட்டை அடித்து, விளையாடி, தூரத்தில் அப்பா நிழல் பார்த்து, வீட்டிற்கு ஓடி, அம்மா வைத்ததை சாப்பிட்டு, எந்தக் கவலையும் இல்லாது தூங்கிப் போன பொழுதை கேட்பேன்.

அல்லது… காலை முதல் தெரு ஓரம் காத்திருந்து அவள் என்னைக் கடந்து போகையில் உரசும் விழிகளின் தாக்கம் கேட்பேன்” என்று செல்வராகவன் கூறியுள்ளார்.

ஆசிரியர்