மாஸ்டரில் விஜய் சேதுபதியின் இளம் வயது பாத்திரத்தில் நடிப்பவர் இவர்தான்

மாஸ்டரில் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளது இவர்தானாம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தில், விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடித்துள்ளாராம்.

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

மகேந்திரன்

இப்படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் கொடூரமான வில்லனாக நடித்துள்ளார். அவர் இளம் வயதிலும், கொஞ்சம் வயதான கெட்டப்பிலும் வருகிறாராம்.

விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கிறார். மாஸ்டர் மகேந்திரனுக்கும் விஜய் சேதுபதி தான் வாய்ஸ் கொடுத்துள்ளாராம். 

ஆசிரியர்