பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ள நிலையில் பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

தனக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததாகவும், கொரோனா பரிசோதனை முடிவில் வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

பின்னர், கொரோனா தொற்றுக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

ஆசிரியர்