Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா எழுந்து வா பாலு! உனக்காக காத்திருக்கிறேன் | இளையராஜா

எழுந்து வா பாலு! உனக்காக காத்திருக்கிறேன் | இளையராஜா

1 minutes read

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்குமோசமாக இல்லை நலமாகவே இருக்கிறார் என எஸ்.பி.பியின் மகன் தெரிவித்தது அவரது ரசிகர்களுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது.

இந்நிலையில், நடிகர் மனோபாலா ருவிட்டரில் வெளியிட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் – சிகிச்சை பெற்று வரும் புகைப்படம். #SPB #PrayforSPB #SPbalasubramanyam சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதியானது. கொரோனாவால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஐ.சி.யூ.வில் உள்ள நிலையில் அவரது மனைவிக்கும் தொற்று உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நண்பரும் இசையமைப்பாளருமான இளையராஜா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இசையைவிட்டு ஸ்வரங்கள் பிரிந்துபோகாததைப் போல் உனக்கும் எனக்கும் இடையேயான நட்பு.

நம் சண்டை போட்டாலும் நட்பாகவே இருந்தோம். அது உனக்கும் எனக்கும் தெரியுன். பாலு எழுந்து வா…. உனக்காக காத்திருக்கிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More