Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜய்யின் அடுத்த படம் பற்றிய மாஸ் அப்டேட்

விஜய்யின் அடுத்த படம் பற்றிய மாஸ் அப்டேட்

1 minutes read

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’ படம் பற்றிய மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய்யின் அடுத்த படம் பற்றிய மாஸ் அப்டேட்

ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. கொரோனா பிரச்சனை முடிவடைந்து திரையரங்குகள் திறக்கப்படும் போது படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மாஸ்டர் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். ‘தளபதி 65’ என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய்

இந்நிலையில் ‘தளபதி 65’ படத்துக்கான ஒப்பந்தத்தில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டிருப்பதாகவும், படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்த கூட்டணி மீண்டும் 4-வது முறையாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More