Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சந்தானம் படத்தில் கமலின் சூப்பர் ஹிட் பாடல்

சந்தானம் படத்தில் கமலின் சூப்பர் ஹிட் பாடல்

2 minutes read

கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பாடல் ஒன்று தற்போது சந்தானம் நடித்திருக்கும் படத்தில் இடம் பிடித்திருக்கிறது.

சந்தானம் படத்தில் கமலின் சூப்பர் ஹிட் பாடல்

சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் டிக்கிலோனா. இப்படத்தில் இளையராஜா இசையில் வெளியான சூப்பர் ஹிட் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

 சீங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில்  கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மைக்கேல் மதன காமராஜன்’. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வைச்சாலும் வைக்காம’ என்ற பாடல் மிகவும் பிரபலம்.

இசைஞானி இளையராஜாவின் துள்ளல் கொள்ளும் இசையால் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அந்தப் பாடலில் கமல், குஷ்பு, ஊர்வசி, நாகேஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலருக்கும் இடையே நடக்கும் காமெடி கலாட்டா பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இப்போதும் அந்தப் பாடல் கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது இந்தப் பாடலை மார்டனைஸ் செய்திருக்கிறது ‘டிக்கிலோனா’ படக்குழு. தற்கால இசையைச் சேர்த்து, இப்போதுள்ள இளைஞர்களும் கொண்டாடும் வகையில் செய்திருப்பதே மார்டனைஸ் என்பதன் பொருள்.

இதற்கான உரிமையை இளையராஜாவிடமிருந்து வாங்கி, ‘டிக்கிலோனா’ படத்துக்காக மார்டனைஸ் செய்திருக்கிறார் யுவன்.

சந்தானம்

கார்த்திக் யோகி இயக்கியுள்ள ‘டிக்கிலோனா’ படத்தில் சந்தானம், யோகி பாபு, ஆனந்தராஜ், அனகா, ஷெரின், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணம், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க, சினீஷ் தயாரித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More