March 26, 2023 10:53 pm

விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்.விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா... வைரலாகும் புகைப்படம்விக்னேஷ் சிவன் – நயன்தாராதமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு சென்றுள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரளாவுக்கு சென்றனர்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாடியதாக விக்னேஷ் சிவன் தனது வலைத்தளத்தில்புகைப்படங்களை பதிவு செய்து இருக்கிறார்.  இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்