பிரபல நடிகையின் கணவருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்?

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், அடுத்ததாக பிரபல நடிகையின் கணவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.பிரபல நடிகையின் கணவருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்?`மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.  பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

இவர் தற்போது, கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இதுதவிர ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவர் இயக்கும் ‘அகம் பிரம்மாஸ்மி’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி உள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. 

நாகசைதன்யா, சமந்தா

இந்நிலையில், அவருக்கு மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்படி தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கும் தேங்யூ, எனும் படத்தில் பிரியா பவானி சங்கரை நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில்  சமந்தாவின் கணவரான நடிகர் நாகசைதன்யா ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆசிரியர்