ட்விட்டரில் ரஜினி சாரை 57 லட்சம் பேர் தொடர்கிறார்கள். அவரோ 24 பேரை மட்டுமே தொடர்கிறார்.
அந்த 24 பேரில் அனிருத், தனுஷ், சவுந்தர்யா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை தவிர்த்து அமிதாப் பச்சன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரை மட்டுமே தொடர்கிறார்.
ரஜினி சார் ட்விட்டரில் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவர் பிரதமர் மோதி சார் மட்டுமே. மோதி சாரின் பர்சனல் ஐடி தவிர்த்து, அலுவல்பூர்வமான பிரதமர் ஐடியையும் பின்தொடர்கிறார்.
மீதியெல்லாம் ஊடகங்கள் மட்டுமே. அதிலும் ஒரே ஒரு தமிழ் ஊடகம் கூட இடம்பெறவில்லை. ஆச்சரியகரமான விஷயம், அவர் தொடரும் பிபிசி ட்விட்டர் ஐடி, இந்தி வடிவிலானது. சூப்பர் ஸ்டாருக்கு இந்தி வாசிக்கத் தெரியுமா எனத் தெரியவில்லை.
-யுவகிருஷ்ணா