Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கருப்பு கண்ணாடி இயக்குனர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கருப்பு கண்ணாடி இயக்குனர்

1 minutes read

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது கருப்பு கண்ணாடி என்ற படத்தை இயக்கி வரும் இயக்குனருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட கருப்பு கண்ணாடி இயக்குனர்

அணி கிரியேஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன் ஜி, தயாரித்து இயக்கும் படம் “கருப்பு கண்ணாடி”. இப்படத்தில் கலைஞர் டிவி தொகுப்பாளர் தணிகை கதாநாயகனாகவும், புதுமுக நடிகை குவின்ஸி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

மேலும் சரண் ராஜ், நடிகர் கஜரஜ், பாடகர் வேல்முருகன், நடிகை சுபாஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

கருப்பு கண்ணாடி போஸ்டர்

கருப்பு கண்ணாடி திரைப்படம் சைக்கோ த்ரில்லர் வகையை சார்ந்தது. இறுதி கட்டத்தில் இப்படம் இருக்கும் நிலையில், இயக்குனர் நியூட்டன் ஜி-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More