வி | திரை விமர்சனம்

நடிகர்நானி
நடிகைஅதிதி ராவ் ஹைதரி
இயக்குனர்மோகன் கிருஷ்ணா இந்திராகாந்தி
இசைஅமித் திரிவேதி, தமன்
ஓளிப்பதிவுபி.ஜி.விண்டா

நகரில் முக்கிய புள்ளிகள் வரிசையாக கொலை செய்யப்படுகிறார்கள். அத்தனை கொலைகளும் ஒரே மாதிரியாக கழுத்து அறுபட்டு சாகடிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் கொலையாளி வேண்டும் என்றே சில தடயங்களை விட்டு செல்கிறான். அதில், ஒரு துண்டு சீட்டும் இருக்கிறது. 

அந்த துண்டு சீட்டில் கொலை செய்யப்படுபவரின் குற்றங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. அடுத்து கொலை செய்யப்படும் குற்றவாளி யார்? என்ற யூகமும் அந்த துண்டு சீட்டில் குறிப்பிடப்படுகின்றன. முடிந்தால் பிடித்துப்பார் என்ற சவாலை கொலையாளி விட்டு செல்கிறான். அவன் ஏன் இப்படி கொலை செய்கிறான்? அதற்கான காரணம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நானி

படம் பார்ப்பவர்களுக்கு கொலைகாரன் யார்? என்ற உண்மை தெரிகிறது. அவனை பிடிக்க முயற்சிக்கும் போலீஸ் அதிகாரிக்கு அது மர்மமாக இருக்கிறது. கொலையாளியை பிடிப்பதில் அவர் தீவிரம் காட்டுகிறார். இருப்பினும் ஒவ்வொரு முயற்சியிலும் அவர் தோல்வி அடைகிறார். இதுவே, மற்ற ‘கிரைம்’ படங்களுக்கும், ‘வி’ படத்துக்கும் உள்ள வித்தியாசம். கொலைகாரராக நானி வருகிறார்.

‘நான் ஈ’ படத்தில் பரிதாபத்துக்குரிய காதலராக வந்த அவருக்கு இதில் முற்றிலும் மாறுபட்ட வேடம். சண்டை காட்சிகளில் பறந்து பறந்து அடிக்கிறார். வித்தியாசமான தோற்றம், மிரட்டலான குரல் என நானி வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்.

மற்றொரு நாயகனாக போலீஸ் அதிகாரி வேடத்தில், சுதிர்பாபு. ஒவ்வொரு கொலையின்போதும் கொலையாளியை கோட்டை விடும் கையாளாகாத கதாநாயகன்.

நானி, அதிதி ராவ்

நிவேதா தாமஸ் கதாபாத்திரம் நிறைய எதிர்பார்க்க வைத்து ஏமாற்றி இருக்கிறது. இதேபோல் அதிதி ராவும் ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். ரோகிணி, ‘தலைவாசல்’ விஜய், ஜெயப்பிரகாஷ், ஹரீஷ் உத்தமன் என்று தெரிந்த முகங்களை வைத்து நேரடி தமிழ் படம் போல் முலாம் பூசியிருக்கிறார்கள்.

நானி

இயக்குனர் மோகன் கிருஷ்ணா இந்திராகாந்தி வித்தியாசமான திரில்லர் படத்தை கொடுக்க முயற்சித்து இருக்கிறார். கதை, சுஜாதா எழுதிய ‘நிர்வாண நகரம்’ நாவலை நினைவூட்டுகிறது.

இதுபோன்ற குற்றப்பின்னணி கதைகளுக்கு பாடல்கள் வேகத்தடைகளாக அமைந்து விடும். ‘வி’ படத்தில் அது அமைந்து இருக்கிறது. தமனின் பின்னணி இசை, கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறது.  பி.ஜி.விண்டாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ‘வி’ வேட்டை.

ஆசிரியர்