போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்

போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘கன்னி மாடம்’ படத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ படத்துக்கு சர்வதேச அங்கீகாரம் ‘ஈரநிலம்’ படத்தில் அறிமுகமாகி 60-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்திருப்பவர், போஸ் வெங்கட். இவர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘கன்னி மாடம்’ படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். 

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சாதி மற்றும் ஆணவக்கொலைகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. 

கன்னிமாடம் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

இந்நிலையில், ‘கன்னி மாடம்’ படம் டொரண்டோவில் நடைபெற உள்ள தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்படுள்ளது. இதனை கன்னிமாடம் படக்குழு உறுதிப்படுத்தி உள்ளது.

தமிழ் சர்வதேச திரைப்பட விழா செப்டம்பர் 11 முதல் 13 வரை டொரண்டோவில் நடைபெறவுள்ளது. போஸ் வெங்கட் இயக்கிய முதல் படத்துக்கே சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்