விஜய் போஸ்டர்கள் கிழிப்பு |தொடர்ந்து ஒட்டும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிக்கப்படுவதால், அவரது ரசிகர்கள் தொடர்ந்து ஒட்டி வருகிறார்கள்.விஜய்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிப்பு... தொடர்ந்து ஒட்டும் ரசிகர்கள்

மதுரையை போலவே தேனி மாவட்டத்திலும் அடிக்கடி நடிகர்களுக்கு ஆதரவாக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த மாதம் துணை முதல்வருக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவை அகற்றப்பட்டன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு போடியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிகர் விஜய் இருப்பது போன்ற போஸ்டர் ஒட்டப்பட்டது. வருங்கால முதல்வரே என்ற வாசகங்களுடன் அந்த போஸ்டர் அமைந்திருந்ததால் அதனை போலீசார் அகற்றினர்.

கிழிக்கப்பட்ட போஸ்டர்

ஆண்டிபட்டியில் நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் நள்ளிரவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

அதில் ‘‘தமிழ் சினிமாவில் கலெக்‌ஷன்னாலும் சரி, தமிழ்நாட்டில் எலக்‌ஷன்னாலும் சரி இனிமேல் தளபதிதான் தளபதி மட்டும்தான்’’ என்று அச்சிடப்பட்டு இருந்தது. மேலும் ‘‘மத்திய அரசு, மாநில அரசியலை பார்த்தாச்சு… எப்போது மக்கள் இயக்க அரசியல்…’’ என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதனை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தினர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து நடிகர்களுக்கு ஆதரவாக ஒட்டப்படும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

போலீசார் அதனை கிழித்து அப்புறப்படுத்தினாலும் மீண்டும் இது போன்ற போஸ்டர் யுத்தம் தொடர்ந்து வருகிறது.

ஆசிரியர்