லாக்டவுனில் ஏழைகளின் பசியாற்றிய சூர்யா ரசிகர்கள்

வடசென்னை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக, லாக்டவுனில் தொடர்ந்து 145 நாட்கள் ஏழைகளுக்கு உணவளித்து உதவி உள்ளனர்.ஏழைகளின் பசியாற்றிய சூர்யா ரசிகர்கள்.... லாக்டவுனில் தொடர்ந்து 145 நாட்கள் சேவை

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர் சூர்யா ரசிகர்கள் உதவி வருகின்றனர்.

இதில்  வடசென்னை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வட சென்னை மாவட்டத்தில், திரு. வி. க நகர் மண்டலத்தில் உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர், மாதாவரம் திருவிக நகர், பகுதிகளில், பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரயில் நிலையம், ஜீவா ரயில் நிலையம், அயனாவரம், ஜமாலியா, புளியந்தோப்பு, மாதாவரம் பைபாஸ், மூலக்கடை போன்ற பகுதிகளில் லாக்டவுனில் வீடுகள் இல்லாமல் தெருவில் வசித்து வரும் நபர்களுக்கு கடந்த 145 நாட்களாக தினமும் மதியம் மற்றும் இரவு  சூர்யா நற்பணி இயக்கத்தை சார்ந்த நண்பர்கள் தலைமையில் தினமும் உணவளித்து வருகிறார்கள். 

சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

144 தடை உத்தரவு போடப் பட்டதிலிருந்து தொடர்ந்து இந்த சேவை பணியை சூர்யா ரசிகர்கள் செய்து வருகிறார்கள். தொடர்ந்து 145 நாட்கள் பலருக்கு உதவி வந்த ரசிகர்கள் தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளதால், இதை நிறைவு செய்துள்ளார்கள். இவர்களின் உதவி மனப்பான்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ஆசிரியர்