Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் பூஜையுடன் தொடங்கியது ‘திரிஷ்யம் 2’ ஷூட்டிங்

பூஜையுடன் தொடங்கியது ‘திரிஷ்யம் 2’ ஷூட்டிங்

1 minutes read

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிக்க உள்ள திரிஷ்யம் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.பூஜையுடன் தொடங்கியது ‘திரிஷ்யம் 2’ ஷூட்டிங்ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது.

இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

திரிஷ்யம் 2 படக்குழு

தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதிலும் மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார்.

இதில் கலந்து கொள்வதற்காக மோகன்லால், மீனா உள்ளிட்ட படக்குழுவினர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More