Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் லட்சுமி மேனன்!

மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் லட்சுமி மேனன்!

1 minutes read

கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு  நடிகையாக அறிமுகமானவர்  லட்சுமி மேனன்.

இத் திரைப் படத்தினைத் தொடர்ந்து அவர்  கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, வேதாளம், றெக்க உள்ளிட்ட பல படங்களில்  நடித்திருந்தார்.

எனினும் படிப்பில் கவனம் செலுத்திய அவர்  சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில்  லட்சுமி மேனன் உடல் எடையைக்  குறைத்துக் கொண்டு  மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இவர்  நடிகர் விக்ரம் பிரபுவுக்கு  ஜோடியாக பேச்சி என்ற திரைப்படத்தில்  நடிக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள இத் திரைப்படத்ததை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளனர் எனவும் விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More