Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வர்மா | திரைவிமர்சனம்

வர்மா | திரைவிமர்சனம்

1 minutes read
Adithya Varma Movie Review: துருவ் விக்ரமுக்கு சிறப்பான அறிமுகப் படம்!

பாலா தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். விக்ரம், சூர்யா போன்ற மகத்தான கலைஞர்களை செதுக்கியவர் பாலா. அதன் காரணமாகவே தன் மகனை நம்பி விக்ரம் பாலாவிடம் அனுப்பி வைத்தார். ஆனால், வர்மா விக்ரமிற்கே பிடிக்கவில்லை என்பதால் மீண்டும் முழுப்படத்தையும் எடுத்து வெளியிட்டார்.

இருந்தாலும் ரசிகர்களுக்கு பாலாவின் வர்மாவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்துக்கொண்டே இருந்தது. நேற்று இந்த படம் OTTயில் வர ரசிகர்கள் பலரும் பார்த்து விட்டனர். எல்லோருக்கும் தெரிந்த கதை தான். காதல் தோல்வியடைந்த மதுவுக்கு அடிமையான ஒரு கோபக்கார மருத்துவர் தன் காதலியை மீண்டும் கரம்பிடித்து தன் தவறுகளை சரிசெய்தாரா என்பது தான்.

படத்தின் ஆரம்ப்பத்திலேயே ஒரு பெண்ணை அந்த இடத்தை தொட்டு கும்பிட சொல்லும் துருவ். அங்கையே பாலாவின் ஸ்டைல் தொடங்கியது என்று பார்த்தால், அடுத்தடுத்த காட்சிகள் ஒரு ஈர்ப்பு இல்லை, உயிரோட்டமும் இல்லை. உண்மையாகவே இந்த படத்தை பாலா தான் எடுத்தாரா, இல்லை எடுக்கும் போதே வேண்டா வெறுப்பாக இருந்தாரா என்று தெரியவில்லை.

மருத்துவத்தை பற்றி பெரிய மெனக்கெடல் இல்லாமல் இஷ்டத்திற்கு எடுத்துள்ளனர். அதுவும் தாயிடமிருந்து வெளியே வரும் குழந்தையின் காலை உள்ளே போக வைக்கும் காட்சி, கண்ணை கட்டுகிறது.

துருவ் நல்ல வேலை ஆதித்யா வர்மாவில் நடித்தார், இல்லையென்றால் ஏதோ சீரியல் ஆர்டிஸ் என்ற ரேஞ்சில் தான் டீல் செய்திருப்பார்கள், படத்தின் நாயகிக்கு சுத்தமாக நடிப்பு இல்லை, கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரி என்பது இல்லை.

அர்ஜுன் ரெட்டி 3 மணி நேரம், வர்மா 2 மணி நேரம் என்றாலும், ஏதோ 4 மணி நேரம் படம் பார்த்த பீல் என்று பலரும் கூறுகின்றார்.

மொத்தத்தில வர்மா.. இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More