Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் யார்?

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் யார்?

1 minutes read

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்- தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டிதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.

அதில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன், பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், பி.டி.செல்வகுமார், முருகன், ஆர்.கே.சுரேஷ் ஆகிய 4 பேர் போட்டியிடுகிறார்கள்.

செயலாளர்கள் பதவிக்கு ‘கலைப்புலி’ ஜி.சேகரன், மன்னன், சுபாஷ் சந்திரபோஸ், ராதாகிருஷ்ணன், ராஜேஷ் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு கே.ராஜன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

வேட்பு மனு தாக்கல், கடந்த 15-ந் தேதி தொடங்கியது. டி.ராஜேந்தர், முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். வேட்பு மனுவை வாபஸ் பெற வருகிற 29-ந்தேதி கடைசி நாள். ஓட்டுப்பதிவு நவம்பர் 22-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More