Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி

நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி

1 minutes read

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நயன்தாராவின் படத்துக்காக உதவி செய்ய உள்ளாராம்.நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவிநடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி

இப்படத்தின் டிரெய்லர் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு டிரெய்லரை வெளியிடப்போவது யார் என்ற தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார்.

அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு டிரெய்லரை வெளியிட உள்ளார். இதன் தமிழ் டிரெய்லர் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் இடையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More