Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பிரபாகரன் வேடத்தில் ‘சீறும் புலி’ பாபி சிம்ஹா | பளீச் ஃபர்ஸ்ட் லுக்

பிரபாகரன் வேடத்தில் ‘சீறும் புலி’ பாபி சிம்ஹா | பளீச் ஃபர்ஸ்ட் லுக்

1 minutes read

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 

‘சீறும் புலி’ என்று தலைப்பிலான இந்தப் படத்தை ஸ்டுடியோ 18 நிறுவனம் தயாரிக்கிறது. ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட் மேன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ்  குமார் இதனை இயக்கி வருகிறார். 

1954 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பிறந்த பிரபாகரனின், 64வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘சீறும்புலி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரில் பிரபாகரனைப் போல் ராணுவ தோற்றத்தில் பாபி சிம்ஹா ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். அவர் அருகில் புலி ஒன்று உள்ளது. புலியின் தலையில் அவர் கையை வைத்துள்ளார். 

‘சீறும் புலி’ என்ற தலைப்பிற்கு மேலே ‘மக்கள் தலைவனின் எழுச்சி’ என்ற வாசகமும், தலைப்பிற்கு கீழே ‘வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு’என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பதும் போஸ்டரில் இடம்பெறவில்லை. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More